முதல் மாநில மாநாடு ( TNBEDCSVIPS)

                     தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின்.                                    முதல் மாநில மாநாடு.

நாள்:07.01.2018 (ஞாயிற்றுக்கிழமை.) காலை :9.00மணி.

இடம் :மல்லிகை அரங்கம் (ஈரோடு பேருந்து நிலையம்   அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி). ஈரோடு மாவட்டம்..

 

மாநில மாநாட்டின் தீர்மானம்:

♠ புதிய வரைவு பாடத்திட்டத்தில் 3ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை  உருவாக்கி தந்த மாண்புமிகு தமிழக அரசு அதனை தனிப்பாடமாகவும் 6ம் வகுப்பு முதல் கட்டாயப்பாடமாகவும் கொண்டுவர  வேண்டும்.

*அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லாத பள்ளிகளிலும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட    மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வர வேண்டும்.மேலும் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை   நிரப்ப வேண்டும்.

 *கணினி ஆய்வகங்கள் அரசு தொடக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில்  கொண்டுவந்து அங்கு பள்ளிக்கு குறைந்த பட்சம் ஓர் கணினி ஆசிரியரை அனைத்து நிலைகளிலும் நியமிக்க வேண்டும்.

*கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கும் மற்ற பாடங்களை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் போன்று பணி விதி,பணிவரன் முறையை  உருவாக்கி  தர வேண்டும் 40000 பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்கள் நலனை கருத்தில்  கொண்டு. 

 

 

 

 

 

Pocket