VIP ARTICLES

ஜி.மெயில் வீடியோ வியூ 

ஜி.மெயில் மூலம் அனுப்பும் வீடியோக்களை இனிமேல் டவுன்லோடு செய்யாமல் அப்படியே பார்க்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன் மூலம் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள மெமரி பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், எளிதாகவும் வீடியோவைப் பார்க்க முடியும். டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் 25 MP-க்கு குறைவான மெமரி கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும். இந்த சேவை 15 நாள்களுக்குள் அறிமுகமாகிவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

*******************************************************************************************************

“கூகுள் குரோம்” பிரவுசரில் இணைய பக்கங்களை விருப்பத்திற்கேற்றாற்போல் மாற்றியமைப்பது எப்படி??

          கணினியில் இணையதளங்கள் மற்றும் இணைய பக்கங்களை பயன்படுத்தும்போது, சில குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் அந்த இணைய பக்கங்களில் மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி Google நிறுவனத்தின் “Chrome” உலாவியில் (Browser) உள்ளது. இதனைப் பயன்படுத்தி இணைய பக்கங்களில் Images, Camera, Microphone, Flash, Popups, Notification போன்ற அம்சங்களை நமது பயன்பாட்டிற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

முதலில், “Google Chrome” பிரவுசரில் ஏதாவது ஒரு இணைய பக்கத்தினை திறந்து கொள்ளவும். இணைய பக்கம் (Web page) முழுமையாகத் தோன்றி நின்ற பின்னர், பிரவுசரின் Address Bar-ன் “Reload Icon”-க்கு வலது புறம் அமைந்துள்ள பூட்டு வடிவ (அ) வட்ட வடிவிலான ஐகானை (View site information) சொடுக்கவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் மேலிருந்து-கீழாக Cookies, Location, Camera, Microphone, Notification, etc. போன்ற ஆப்ஷன்கள் தோன்றுவதைக் காணலாம். இவற்றின் வலதுபுறம் அமைந்துள்ள “கீழ் அம்புக்குறியுடன் கூடிய (Bottom Arrows)” ஆப்ஷன்களைக் கொண்டு இணையப் பக்கங்களின் செயல்பாட்டினை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

இதில்,

  • Use Global defaults.
  • Always allow on this site.
  • Always block on this site.                — என மூன்று விதமான அமைப்புகள் உள்ளன.

உதாரணமாக, இணையப் பக்கங்களை படங்கள் இன்றி (Without Images) காண்பதற்கு “Images” என்ற அமைப்பில் “Always block on this site” என்ற ஆப்ஷனை டிக் மார்க் செய்துவிட்டால், இந்த இணைய பக்கத்தை இனி படங்கள் ஏதுமின்றி பயன்படுத்தலாம்.

Facebook, Twitter போன்றவற்றிலிருந்து Notification தொடர்ச்சியாக வருவதை நிறுத்த இந்த விண்டோவிலுள்ள “Notification” அமைப்பில் “Always block on this site” என்ற ஆப்ஷனில் டிக் மார்க் கொடுத்துவிட்டால் இனி Notification வருவது நின்றுவிடும். நீங்கள் மடிக்கணினியில் இணையத்தை உபயோகிக்கும்போது உங்களுடைய தற்போதைய முகவரி (Location) இந்த இணையதளத்தால் திருடப்படுகிறது / கண்காணிக்கப்படுகிறது என நீங்கள் எண்ணினால் “Location” என்ற அமைப்பில் “Always block on this site” என்ற ஆப்ஷனில் டிக் செய்து விட்டால், உங்களுடைய Location கண்காணிக்கப்படுவது தடுக்கப்படும்.

இதே போன்று, இதிலுள்ள Camera, Microphone, Popups, Flash போன்ற அனைத்து அம்சங்களையும் உங்களுடைய தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். இவற்றை மீண்டும் பழைய நிலைக்கே மாற்ற விரும்பினால் “Use global default (அ) Always allow on this site” -என்ற ஆப்ஷன்களைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட இணையதளங்களின், இணைய பக்கங்களை நமது தேவைக்கேற்றாற்போல் பயன்படுத்திக் கொள்வதில் இந்த செயல்முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

— G. RAJKUMAR, MCA., BEd.,

(Web Admin – TNBEDCSVIPS)

********************************************************************************************************

 

 

 

 

 

Pocket