🎓 தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி 🙏

✍ தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை தேசிய ஆசிரியர் கல்வியியல் விதிகளுக்கு (NCTE) உட்பட்டது. அரசு பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும் என்பதே இந்த புதிய அரசாணை (G.O ms No.26) ஆகும்.

✍ இந்த அரசாணையை பல ஆசிரியர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வரவேறுள்ளனர். மேலும் இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி 🙏

⭐ எங்களது கோரிக்கைகள் :-

1) 814 கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன, இப்பணியிடங்களுக்கு முறையான கல்வித்தகுதி அறிவிப்பதில் சிக்கல் நீடித்துவந்தது. இதன் காரணமாகவே இப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது சிக்கல் தீர்ந்து புதிய அரசாணை வந்துவிட்டது. எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் இப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டுகின்றோம்.

2) அனைத்து அரசு பள்ளிகளிலும் புதிய பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் அறிவியலில் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது. கணினி அறிவோடு மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்படும்படி புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புகளில் மூன்று பிரிவுகளில் கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தி கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

3) 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் அறிவியலில் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது.இக்கணினி பாடத்தை அரசு 6-வது தனிப்பாடமாக கொண்டுவந்து அதற்கு இளநிலை கணினி அறிவியல் மற்றும் பி.எட் (UG+B.Ed) முடித்த பட்டதாரிகளை ஆசிரியர்களாக பணியில் அமர்த்த வேண்டும். அரசு தரப்பில் இருந்து தற்போது இதற்கான போதுமான நிதி இல்லை என்று நிதி பற்றாக்குறையை காரணமாக கூறி வருகின்றது. எனவே அரசு 54,000 பி.எட் கணினி பட்டதாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு தொகுப்பூதிய அடிப்படையிலாவது பள்ளிக்கு ஒரு கணினி பட்டதாரியை பணியில் அமர்த்த பணிவுடன் வேண்டுகிறோம்.

✍ மேலும், கணினி அறிவியலில் பட்டப் படிப்பை முடித்த இவர்கள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள கணினி அறிவியல் பாடத்தையும், கணினி ஆய்வக பயிற்சியையும் மாணவர்களுக்கு திறன்பட கற்றுத்தருவர்.
விருப்பப்பட்டு ஆசிரியர் ஆகிவிடலாம் எனும் கனவோடு படித்த எங்களுக்கு படித்த படிப்பையும், தகுதியையும், தன்மானத்தையும் அடகு வைத்து வேறு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்க வேண்டுகிறோம்.

✍ TNBEDCSVIPS

🌐 http://www.tnbedcsvips.in/

Pocket

One thought on “🎓 தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி 🙏”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *