‼ கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… 🖥

‼ கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… 🖥

🔮 இன்னும் ஓரிரு தினங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் பிரச்சாரம்’ தீவிரமடைய உள்ளது…

✍ இப்போது நமது 10 வருட வாழ்வாதார கோரிக்கைகளை உங்கள் தொகுதிக்கு ஓட்டு கேட்க வருகை புரியும் வேட்பாளர்களிடம் ‘மனுவாக’ கொடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பி.எட்., கணினி ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

🎓 கணினி ஆசிரியர்கள் அனைவரும் நமது நீண்டகால கோரிக்கைகளை உங்களுடைய தொகுதிக்கு வருகை புரியும் ஒவ்வொரு நாடாளுமன்ற வேட்பாளரிடமும் “கோரிக்கை மனுவாக” அளித்து அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனிப்பாடமாகக் கொண்டுவரக்கோரி வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🚩 ஒரு தொகுதிக்கு 100 மனுக்களாவது கொடுக்க அனைத்து மாவட்ட கணினி ஆசிரியர்களும் முன்வர வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் பி.எட்., படித்த கணினி ஆசிரியர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.

👀 ஏனெனில், தற்போது UG+B.Ed., முடித்தவர்கள் TRB நடத்தும் “கணினி பயிற்றுனர்” பணிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.

📑 இதனையும் ஒரு மனுவாக அளிக்க வேண்டும்

👆 அனைவரும் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும்….

🙏 நன்றி,

🌎 http://www.tnbedcsvips.in/

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *