‼ ஆன்லைன் தேர்வில் முறைகேடுகள் 🔵 நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு மனு‼

@Chennai 💥

💢 சென்னை மற்றும் சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கணினி ஆசிரியர்களும் இன்று நடைபெறும் சென்னை நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாளை (27-06-2019) மூன்று மையங்களுக்கு மட்டும் பெயரளவிற்கு மறுதேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

🌟 தமிழகத்தின் வட மாவட்டங்களில் சர்வர் பிரச்சனை இல்லாததால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நினைக்க வேண்டாம். TRB வாரியம் 3 மையங்களுக்கு மட்டும் மறுதேர்வு வைத்துள்ளது. ஆனால், 20-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் “காப்பி” அடித்து தேர்வை எழுதியுள்ளார்கள். காப்பியடித்து தேர்வெழுதிய இவர்கள் 150-க்கு 148, 149 வரை மதிப்பெண் எடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் நேர்மையாக தேர்வெழுதிய நாமெல்லாம் எப்படி வேலைக்குச் செல்ல முடியும்??

✍ மாநில அளவில்… அதுவும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் “தகுதித்தேர்வில்” தேர்வு எழுதியவர்கள் குழுவாக விவாதம் செய்து “காப்பி” அடித்து இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்த ‘அநியாயத்தை’ இந்த அரசு ஊத்தி மூட பார்க்கிறது. பெயரளவிற்கு தேர்வை வைத்துவிட்டு, இதில் தேர்ச்சி பெறுபவர்களை அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க அரசு முயற்சிப்பது சரியல்ல.

‼ பல்வேறு மோசடிகளுடன் நடைபெற்ற இந்த கணினி பயிற்றுநர் ‘குளறுபடி’ தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு நேர்மையான முறையில் மீண்டும் “OMR” விடைத்தாளில் இந்த தேர்வை நடத்தி தகுதியுள்ள ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 👍

🎓 அனைவரும் தவறாமல் இன்று கலந்து கொண்டு இந்த அநீதியை தடுத்து நிறுத்திடுவோம் 🛡

🔅 Protest Zone :-
Directorate of School Education (DPI Campus)
பள்ளிக்கல்வி இயக்குனரகம் – நுங்கம்பாக்கம், சென்னை – 600008.
🛰 https://goo.gl/maps/ZEjvMmA5ptQ2UWc89

🔆 Time : 9.00am

🔮 முதலில், அனைவரும் குழுவாக சென்று மனு அளித்துடுவோம்; இதற்கு அதிகாரிகள் கூறும் பதில்களைப் பொறுத்து அடுத்தகட்ட நகர்வு இருக்கும்.

🔴 நாம் முன்வைக்கும் கோரிக்கைகளையும்,அதிகாரிகள் கூறும் பதிலையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் 📸

👆 மேலே, PDF வடிவிலான கோரிக்கை “விண்ணப்பம் (Petition)” பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை அனைவரும் ⬇ பதிவிறக்கம் செய்து PRINT செய்துகொள்ளவும்.

🔅🔅🔅🔅🔅🔅🔅

💎 இன்று ஒருநாள் மட்டுமே நமக்குக் கிடைத்த இறுதி வாய்ப்பு..!!

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *