புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு | 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.தமிழகத்தில், சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்திய போது, அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு அமர்த்தவில்லை. அடுத்த ஆண்டே, கணினி கல்வி பாடத்திட்டம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது. கணினி கல்வி முடித்த பட்டதாரிகள் பலகட்டமாக, போராட்டம் நடத்தியும், அரசு கண்டுக் கொள்ளவில்லை.மேலும், 1999ல், மேல்நிலை வகுப்புகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், கணினி அறிவியல் பாடம் இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாள கணினி               சார் சான்றிதழ் படிப்பு முடித்த, 1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்து, பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகள் போராடியதால், பணியில் அமர்த்திய கணினி ஆசிரியர்களுக்கு, போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், 1,200 ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்து, பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின், கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்ப, எவ்வித அறிவிப்பும் இல்லை.கடந்த 2006க்கு பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்திட்டம் இல்லை. கணினி அறிவியல் பாடத்தை, கல்லுாரிகளில் முக்கிய பாடப்பிரிவாக தேர்வு செய்து படித்து, பி.எட் முடித்து, வேலையில்லாமல், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்க, அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு கொண்டுவந்த, புதிய பாடத்திட்டம் அமலானால், படித்து வேலையில்லாமல் காத்திருக்கும், கணினி பட்டதாரிகளுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும் என, கணினி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் குமரேசன் கூறுகையில், ”பள்ளிகளில் அலுவலகம் சார் பணிகளுக்கு கூட, பி.எட்., முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.தற்போது பொறியியல் மாணவர்களும், பி.எட்., படிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதிய பாடத்திட்டம் அமலானால், கூடுமானவரை கணினி ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். பள்ளிகளில் 3ம் வகுப்பிலிருந்து கணினி கல்விக்கு முக்கியத்துவம் தருவதை வரவேற்கிறோம்,” என்றார்

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *