பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர்

🎓  பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு!!*  💼
📮  _Sunday, September 17, 2017_
✨  பி.எட் படிப்பில் கணினி படித்து முடித்த நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர். _தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின்_ மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பி.எட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் உள்ளனர்
  
📊  *ஆசிரியர் படிப்பு* தமிழக அரசு அங்கீகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும். பி.எட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கு வேறு எங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை...
📓  இளங்கலை பட்டத்துடன் பி.எட் மற்றும் முதுகலை பி.எட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில் ஆனால் பி.எட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை . இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .
⌚  அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான் பி.எட் படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும். இல்லையெனில் படித்தும் பயனின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்டுகின்றது . ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பி.எட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கீகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும்.
⏳  தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ *(RTI)* தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது. இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் *_(₹.300 கோடி)_* நிற்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் குடும்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
✍  *வெ.குமரேசன்*,
_மாநிலப் பொதுச்செயலாளர்,_
*9626545446*
*_தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்_*
🌍  _பதிவு எண்  ®  655/2014._
Pocket

2 thoughts on “பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர்”

  1. அனைவரும் இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் #Share செய்து கணினி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை வலுப்பெற உதவிடுங்கள்….

    நன்றி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *