கணினி ஆசிரியர்களை மட்டும் நிராகரித்தது #தமிழக_அரசு!!

அனைத்துத் துறை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு #நல்லாசிரியர்_விருது வழங்கியது !!
ஆனால், கணினி ஆசிரியர்களை மட்டும் நிராகரித்தது #தமிழக_அரசு!!
கணினி ஆசிரியர்கள் மட்டும் அரசு பள்ளிகளின் தீண்டத் தகாதவர்களா??
கல்வித்துறையில் கூட ஏன் இத்தனை பாரபட்சம்??
பள்ளிகளில் Document-களை Type செய்ய, EMIS Update,
Students Aadhar Update, தினந்தோரும் “மிக மிக அவசரம்” என்று வரும் மின்னஞ்சல்களைப் படித்து அவற்றிற்கான கோப்புகளை தயார் செய்து அனுப்புதல்,  Print-Out முதல் #Xerox வரை -என- மாணவனுக்கு பாடம் எடுப்பதைத் தவிர்த்து மற்ற அனைத்து அலுவலகப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் #கணினி_ஆசிரியர்கள் தமிழக அரசின் ஊனக் கண்களிலிருந்து மாயமானது ஏனோ??
நல்லாசிரியர் விருது பெற கணினி ஆசிரியர்கள் மட்டும் தகுதி அற்றவர்களா??
இந்த ஆசிரியர் தினத்தில் (2017) ஒரு கணினி ஆசிரியருக்குக் கூட நல்லாசிரியர் விருது வழங்கப்படவில்லை!!
ஏன்??
மற்ற துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் விருதுகள் பெறும் வேளையில், கணினி ஆசிரியர்கள் மட்டும் அறிவிக்கப்படாத சோகங்களுடன் கை-தட்ட மட்டுமே முடிந்தது!!
இந்த (2017) ஆண்டின் ஆசிரியர் தினத்தில் #கணினி_ஆசிரியர்களை சபித்துவிட்டது தமிழக அரசு!!
கல்வித்துறையில் அனைத்து துறை ஆசிரியர்களுக்கும் பாரபட்சமற்ற சம-நீதி வழங்கப்படுமா??
✍️  Solo Raj
Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *