கணினிக் கல்விக்கு கமிஷன் தான் பிரச்சனை

  • 4325 அரசுப்பள்ளிகளில் கணினிக்கல்விக்கு போதிய நிதி கொடுத்தும் தொடங்கவில்லை மாநில அரசு..!2011..

கமிஷன்’ பிரச்னையால் முடங்கியதா கம்ப்யூட்டர் கல்வித் திட்டம்?

கம்ப்யூட்டர் மூலம் பாடம் சொல்லித் தரும் திட்டம் (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) சுருக்கமாக ஐ.சி.டி.
பெரிய, பெரிய தனியார் பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தரக்கூடிய வசதிகள் இருக்கின்றன. எனவே தனியார் பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவில் திறமையானவர்களாக இருக்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்கும் திட்டத்தை (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்.
அதன்படி மத்திய அரசின் (ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும்) அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த திட்டத்துக்கான நிதியைப் பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. கடந்த 2011-12 ம் கல்வியாண்டில், முதல் கட்டமாக இந்த திட்டத்தை 4345 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்த, மத்திய அரசு முதல் கட்டமாக 43 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
2011-ம் ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் இதற்காக ரூ.250 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு தயாராக இருந்தது. ஆனால், பெயருக்கு முதல்வர் கடந்த முறை வெற்றி பெற்ற ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் மட்டும் இதை செயல்படுத்தி விட்டு, பாதியில் ‘அம்போ’ என்று விட்டு விட்டார்கள். முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்த ரூ. 43 கோடியையே சரியாக செலவழிக்கவில்லை.
“43 கோடி ரூபாய் என்ன ஆச்சு. அந்த திட்டத்தை ஏன் கிடப்பில் போட்டீர்கள்” என்று கேள்விகள் கேட்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறையை விழி பிதுங்க செய்து விட்டது, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பிளான் அப்ரூவல் போர்டு.  2011-12ம் ஆண்டு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு பள்ளிக்கும் கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விட வேண்டும். ஆனால், கமிஷன் பிரச்னையால் டெண்டர் விவகாரம் ‘‘ஜவ்வு மிட்டாய்’’ போல் இழுத்துக் கொண்டு போனது. ஒரு வழியாக,  ‘ஐ.சி.டி., திட்டத்துக்கான டெண்டர், 11.9.2013-ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும்’ என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், என்ன காரணமோ அப்போதும் டெண்டர் நடக்கவில்லை. இதன் பின்னணியில், பள்ளிக்கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் தலையீடு இருப்பதாகத் தகவல்கள் கசிந்தன.
ஐ.சி.டி., திட்டம் பற்றி தமிழக அரசிடம் மத்திய அரசு அதிகாரிகள் கேட்டதற்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அனுப்பிய பதில்தான் ரொம்பவும் வேடிக்கையானது.
‘2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால், டெண்டர் விட முடியவில்லை’ என்று பதில் சொல்லி சமாளித்திருக்கிறார். ஆனால் உண்மை நிலவரமோ வேறு. அதாவது, இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு முதல் கட்டமாக நிதி வழங்கியதோ 2011-12ம் கல்வியாண்டில். டெண்டர் அறிவிப்பு வெளியானதோ 2013-ம் ஆண்டு. சட்டசபை தேர்தல் நடந்ததோ 2016-ம் ஆண்டு மே மாதம். எவ்வளவு குளறுபடிகள்.
இது பற்றி பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்தவர்களிடம் பேசினோம்.
“எந்த திட்டமும் உருப்படியாக நிறைவேறவில்லை. முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்த பல திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. உயர் அதிகாரிகளின் ‘கமிஷன்’ பிரச்னையால் அந்த திட்டங்கள் எல்லாம் அப்படியே அந்தரத்தில் தொங்கியபடி இருக்கின்றன. முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இது பற்றி எதுவும் தெரிவதில்லை” என்று காதை கடிக்கின்றனர்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் சபீதாவை தொடர்பு கொண்டு பேசினோம். “ஐ.சி.டி., டெண்டர் விவகாரத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றவில்லை. அதனால் டெண்டர் தள்ளிப்போகிறது. விரைவில் புதிதாக டெண்டர் விடப்பட்டு அந்த திட்டம் நிறைவேற்றப்படும்” என்றார்.
NEWS:விகடன்.

 கணினி அறிவியல் பாடபுத்தகம் முடக்கம்: பின்தங்கும் அரசு பள்ளி மாணவர்கள்

கோவை: தமிழக அரசால், நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்காக அச்சிடப்பட்ட, கணினி அறிவியல் பாடத்திட்ட புத்தகங்கள் முடக்கிவைக்கப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கடந்த, 2011ம் ஆண்டு, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், சமச்சீர் கல்வியில் 6, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டு, புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அக்கல்வியாண்டே காரணங்கள் ஏதுமின்றி, புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டு, கணினி அறிவியல் பாடம் கற்பித்தல் நிறுத்தப்பட்டது. இன்றைய உலகில், தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அடிப்படை கம்ப்யூட்டர் இயக்கங்கள் கூட அறியாமல் படிப்பை முடித்து செல்கின்றனர். இதனால், உயர்கல்வி, வேலைவாய்பு பெறுதல் போன்ற போட்டியில், பின்தங்கிவிடுகின்றனர். குறிப்பாக, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை ஆசிரியர்கள் இல்லை..

 

தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் அழிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடம்…

 தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் அழிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடம்…
2012-ல் வெளியிடப்பட்ட 4000-கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கான ICT எனப்படும் ஒருங்கிணைந்த கணினி அறிவியல் பாடத்திட்டம் தற்போது சுருக்கப்பட்டு 1000 பள்ளிகளுக்கு மட்டும் என வரைவு செய்யப்பட்டுள்ளது…. இதனால், அரசு பள்ளிகளின் கல்வித்தரம்  சரிந்துள்ளது என்றே கூறலாம்…
 தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 90,00,000 மாணவர்களுக்கு பயன்பட வேண்டிய நிதிப்பணம் திறமையாகப் பயன்படுத்தப்படாமல் மத்திய அரசிற்கே திருப்பி அனுப்பப்பட்டதுதான் கணினிக்கல்வி மீது நடத்தப்பட்ட பகிரங்க படுகொலை…
1992-லிருந்து இன்று வரையில் கணினி அறிவியலின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மட்டுமே சுமார் *_2.5 இலட்சம் கோடி‌.._*  இதுபோன்ற கல்வியை சீரழிக்கும் நிகழ்வு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் அரங்கேறியுள்ளன…
  சென்ற ஆட்சிக்காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு நிதியின் கீழ் ₹.900 கோடி நிதி கணினி அறிவியல் பாடத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது… ஆனால் அந்த நிதிப்பணமும் மத்திய அரசிற்கே திருப்பி அனுப்பியது தமிழக அரசு…. இப்படி தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதன் விளைவுதான், அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட கல்வியில் பின்தங்க நேர்ந்தது…
 கணினி ஆய்வகங்கள், கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள் என இதற்காக ஆறு முறைக்கு மேல் தனியார் நிறுவனங்களுக்கு *டெண்டர் விடப்பட்டு ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது…*
 தமிழக வரலாற்றில் ஒரு துறை இத்தனை அமைச்சர்களை சந்திருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது… சென்ற ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் *_சி.வி.சண்முகம்,  சிவபதி,  அக்ரி.கிருஷ்ணமூர்த்தி,  பழனியப்பன்,  வைகைச்செல்வன்,  வீரமணி_*  என ஆறு அமைச்சர்களும்,  தற்போதைய ஆட்சியில்  *_பெஞ்சமின்,  மா.ஃபா. பாணடியராஜன்,_*  தற்போது *_செங்கோட்டையன்_*  என ஆறு ஆண்டுகளில் ஒன்பது அமைச்சர்களை மாற்றம் செய்தது தமிழகக் கல்வித்துறைக்கு பெரும் பின்னடைவு…

சமச்சீர் கணினி புத்தகம் இன்று குப்பையில் தூங்கும் அவல நிலை..RTI-தகவல்.

குப்பையிலே விசியது பாடல்நூல் கழகம் 500000இலட்சம் மாணவர்களின் கனவுக் கல்வி   கணினிக்கல்வி..
 மத்திய அரசு கொடுக்குது தமிழக அரசு கெடுக்குது பாஜக தலைவர் தமிழிசை..!

தமிழகம் கல்வித்துறையில் பின்னடைவு   900கோடி நிதி திருப்பி அனுப்பியதால் -தமிழ் மாநில காங்கிரஷ் தலைவர் ஜு.கே.வாசன்..

 

மாண்புமிகு மத்திய அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் நமது சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து
அரசுப்பள்ளியில் ஆரம்ப கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவரக் கோரி கோரிக்கை மனு…

 

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசியர்கள் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து மனு..

மாண்புமிகு மாஃபா அவர்களிடம் கணினி ஆசிரியர்கள் சந்திப்பு..

டிசம்பர் 2016..

மத்திய அரசு கணினிக்காக கொடுத்த நிதி எங்கே?:

 

தலைமை செயலகம் ..

மாண்புமிகு மாஃபா ஐயா வுடன் சந்திப்பு :

நடந்தது என்ன? இவை தான்..

, பள்ளிக் கல்வி அமைச்சர்கள் துறை அதிகாரியிடம் பவ்யத்தோடு வலம் வந்தனர். ஆனால் பாண்டியராஜனோ, ‘ நான் சொல்வதை செயல்படுத்துங்கள்’ எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனை துறையின் உயர் அதிகாரி ரசிக்கவில்லை. இதைவிட, மிக முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், ஏழைக் குழந்தைகள் கணிப்பொறி கல்வி கற்பதற்காக ஐ.சி.டி எனப்படும் ஒருங்கிணைந்த கணிப்பொறி பயிற்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு 900 கோடி ரூபாயை ஒதுக்கியது. ஐந்தாண்டுகளாக நிதியை செலவிடாமல் தள்ளாட்டத்தில் வைத்திருந்தனர் அதிகாரிகள். இந்தப் பணியை எடுத்துச் செய்வதற்காக வந்த நிறுவனங்கள், அதிகாரியின் அழுத்தத்தால் பின்வாங்கிவிட்டன. ஒருகட்டத்தில், நிதியைத் திருப்பி அனுப்பும் வேலைகள் தொடங்கின.

 

இதனை அறிந்த அமைச்சர் பாண்டியராஜன், ‘ ஐ.சி.டி திட்டத்தால் ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும்’  என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் பேசி திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வாங்கிவிட்டார். ‘ கணிப்பொறி தொடர்பான கல்வி என்பதால், எல்காட் வசம் பணிகள் ஒப்படைக்கப்படுவதைவிட, பள்ளிக்கல்வித்துறையே எடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும்’ என அதற்கான பணிகளில் இறங்கினார். மீண்டும் ஐ.சி.டி கொண்டு வரப்படுவதை அதிர்ச்சியோடு கவனித்தார் துறை அதிகாரி. ‘ ஐ.சி.டியை முன்வைத்து நடந்த விஷயங்கள் தெரிந்துவிடும்’ என்பதால், சில ஐ.ஏ.எஸ்கள் துணையோடு கார்டன் வட்டாரத்துக்கு தகவல் அனுப்பினார். ‘ யாரைக் கொண்டு வருவது’ என பல பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. ‘ அ.தி.மு.கவில் சீனியராக வளர்மதி இருப்பதால், பாண்டியராஜனால் எதிர்த்துப் பேச முடியாத நிலை ஏற்படும்’ என்பதை உணர்ந்தே, அவருக்குப் பதவியைக் கொடுக்க வைத்துள்ளனர்” என்றார் விரிவாக.

 

மாஃபா.பாண்டியராஜன்” கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வித் திட்டம் போன்றவற்றில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளன. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு ஆதாரபூர்வமாக தகவல் சென்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் பலரும், ஒரே துறையில் நீண்டகாலம் அமர்ந்து கோலோச்சுகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளில் விலையில்லா புத்தகப் பை, காலணி தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும், மறு டெண்டர் என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயமாக்கினர். பாடநூல்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம்பெற்றுவிட்டது என்பதற்காக, மூன்று கோடி ரூபாய் செலவில் மறு அச்சடிப்பு பணிகளைச் செய்தார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பதற்காகவும் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் டெண்டரை வழிநடத்தும் முடிவில்தான் இதுபோன்று முடிவு எடுத்திருக்கிறார்கள்” என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

 2017-கணினி கல்வியும் கணினி ஆசிரியர்கள் போராட்டமும்..

May-2017

 

மாண்புமிகு கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஐயா அவர்களை தொடர் சந்திப்பு

40000கணினி ஆசிரியர்களுக்கு வேலைவழங்க நடவடிக்கை மாண்புமிகு கல்வி அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் ..

 

மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர்கள் சட்டசபையில் கணினிக்கு குரல்…

 

அரசுப்பள்ளியில் உடனே அனைத்து நிலைகளிலும் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் தங்கம் தென்னரசு பொன்முடி சட்டசபையில் கல்வி மான்ய கோரிக்கையில் குரல்.. வகுப்பிலிந்து கணினி அறிவியல் பாடம் அரசுப்பள்ளியில்

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என் சிவா அவர்களிடம்  கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..

50 லட்சம் கணினி அறிவியல் பாட புத்தகங்கள் வீணடிப்பு : ஆசிரியர்கள் சங்கம்  

 

அரசுப்பள்ளியில்  கணினி  அறிவியல் பாடத்தை கொண்டுவர அன்புமணியின் வேண்டுகோள்.

முன்றாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடம்…

 

மாண்புமிகு முதல்வர் ,,துணை முதல்வர் கல்வி அமைச்சரிடம் தொடர் கோரிக்கை …

நாமக்கல்..

சென்னை துணை முதல்வர் இல்லத்தில்..

ஈரோடு அமைச்சர் இல்லம்..

சென்னை அமைச்சர் இல்லத்தில்

பெரம்பலூர் மாவட்டத்தில் நமது சங்கம் சார்பில் ..

கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர் கோரிக்கை ..

 

கணினி ஆசிரியர்கள் நமது சங்கத்தின் சார்பில் முதல்வர் தனிப்பிரிவில் மனு..

கணினி கல்விக்கு 3ம் வகுப்பிலிந்து விடியல்…

இதற்கு தான் இவ்வளவு போராட்டம்!

கணினி பயன்படுத்தாத அரசுப்பள்ளி மாணவர்கள்..

கணினி பாடத்தை சொல்லித்தர கணினி ஆசிரியர்களை நியமிக்க மாணவர்கள் கோரிக்கை..

பள்ளிக்கு ஒர் கணினி ஆசிரியர்கள் ..

அரசுப்பள்ளி இனி கணினிப் பள்ளி ஏங்கும் மாணவர்களும் ஆசிரியர்களுக்களும்..

 

ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடம்..

இன்று வரை வற்றாத கண்ணீர் அது கணினியின் கண்ணீர் தான் ..!

தீக்கதிர்

தினமலரில் கணினியின்  கண்ணீர்..

துடைப்பதற்கு கரங்கள் இன்றி இன்றுவரை வாடும் 40000கணினி ஆசிரியர்கள் குடும்பங்கள்..

செய்தி தொகுப்பு:
திருமதி ஜமுனாமணி,
மாநில மகளிர் அணிச் செய்தித் தொடர்பாளர்,

புகைப்படம்:
திரு வேலு
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்,

நன்றியுடன்:
திரு வெ.குமரேசன் ,
மாநில பொதுச்செயலாளர் ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

Pocket

One thought on “கணினிக் கல்விக்கு கமிஷன் தான் பிரச்சனை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *